மார்ச் 27, 2026, பரல் - 12
சுயகட்டுப்பாடு – சிறப்பு
🌷 சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் - CSK 2026 🌷
அனைவருக்கும் அன்பான வணக்கம்!
சித்திரை மாதத்தின் மகிழ்ச்சியை கொண்டாட, நம்முடைய சிலம்பின் சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்துடன் நம்மை நோக்கி வருகிறது!
📅 ஏப்ரல் 25, 2026 | April 25, 2026
⏳இன்னும் 4 வாரங்களே உள!
🔥 பயிற்சிகள் தொடங்கட்டும்!படைகள் தயாராகட்டும்! அரங்கமே அதிரட்டும்!
உங்கள் அனைவரின் பங்கேற்பையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்!
பொருள் தரும் திருக்குறள் - தொடர் : 10
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி-25
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்-85
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்-113
உங்கள் கவனத்திற்கு:
🌈 04/04/2026 : பள்ளி விடுமுறை (Spring Break)

CSK 2026 - சிலம்பின் சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் !!
👉 CSK - Robotics Tournament
👉 CSK - Science Exhibits
👉 CSK - Culturals
முப்பெரும் விழா!
கூடுதல் விவரங்கள் மற்றும் இந்நிகழ்ச்சியில் பதிவு செய்ய, கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
சிலம்பு தமிழ்ப்பள்ளி செயல்பாடுகள்
🌈 பிங்கோ BINGO
நமது சிலம்பு நூலகத்தில் இருந்து"மார்ச் மாதம் படிக்கும் மாதம்" என்னும் தலைப்பில்"பிங்கோ" தாள் வெளியாகிறது. அதை பற்றிய தகவல் உங்கள் குழந்தைகளின் தமிழ் ஆசிரியர் மூலம் உங்களுக்கு வந்து அடையும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் நூலகரை அணுகவும்.
🦋 கதை கேட்கலாம் வாங்க!
சிலம்பின் நூலகர் வகுப்பில் மாணவர்களுக்காக மாணவர்களுடன் கதையை படித்து வருகிறார்.
🌻இளம் தமிழ் பேச்சாளர்கள் பயிற்சி பட்டறை - ஆசிரியை திருமதி.லதா குமார்
சிலம்பின் சிறப்புச் செயல்பாடுகள்:
🌞 சிலம்பு இளையோர் கால்பந்தாட்டம் - பயிற்சி நிறைவுநாள்
🌺 சிலம்பு கூடைப்பந்து - வகுப்பு உண்டு
🌷 ஹார்வர்டு - ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு வகுப்பு நடைபெறுகிறது.

வாருங்கள் பாராட்டுவோம் 🎊
MyWay செயலியை உருவாக்கி மாநில அளவில் பெரும் வெற்றியும் அங்கீகாரமும் பெற்றுள்ள மாணவி நிவ்யசாயிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🏆நிவ்யசாயின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்!
🧩 கணக்கில் புலியா! - உங்களுக்காக Puzzle 11

How Did Spring Get Its Name? 🌸
Have you ever wondered why we call it spring?🌷🌱🐣. The season gets its name from the verb “spring,” meaning to jump, burst, or rise suddenly (Spring >> Svri >> Sவிரி >>…விரிதல்). Flowers spring up from the ground, buds spring open on trees, and life seems to burst forth almost overnight. It’s nature’s joyful comeback! 🌸✨🌼

சுலபமாக தமிழ் எழுத்துகளைக் கற்போம்!
கீழேயுள்ள மஞ்சள் கட்டங்களை சொடுக்குங்கள் - தமிழை எளிமையாய், விளையாட்டாய் நம் குழந்தைகள் கற்க சிலம்பின் புதிய முயற்சி.
(Tamil letters practicing App for SILAMBU Students and Student volunteers)
சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி விளையாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும்
முக்கிய இணைப்புகள்:
Website: https://silambu.us/
School LMS : https://openlms.mntamilschool.org/login/index.php
Library LMS : :https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1
Location: Hillside Elementary School, 36801 11 Mile Rd, Farmington Hills, MI 48335
Thank you for taking the time to read through our newsletter. If you have any questions or need further information, please don't hesitate to reach out to us.
With gratitude - see you in the next edition,
Hemalatha. K
தூரிகை தொகுப்பாளர்
On behalf of the Newsletter Team.
