பிப்ரவரி 06, 2026, பரல் - 5
கவனம் – வெற்றி
✨ சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் - CSK 2026 ✨
சித்திரை சிறப்புக் கொண்டாட்டம் - CSK 2026 ஏப்ரல். குழு நடனம், குழு நாடகம் என அனைத்தையும் கூடிக் குழுவாய் மகிழ்ந்திட தயாராகுங்கள்!
பொருள் தரும் திருக்குறள் - தொடர் : 4
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு-21
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்-70
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு-73
உங்கள் கவனத்திற்கு:
➤ 02/08/2026 : 7PM EST
சிலம்பின் செஸ், ரோபாட்டிக்ஸ், & ஹார்வர்டு பல்கலைக்கழக வணிக திறன் ஊக்க வகுப்புகளைப்பற்றிய சிறப்பு நிகர்மெய் கூட்டம் நடைபெறவுள்ளது (இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது). பதிவு செய்தோர், செய்யாதோர் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இணைப்பு : https://meet.google.com/pxk-whme-qro
➤ 02/21/2026 : பள்ளி விடுமுறை, Mid winter break.
➤ முந்தைய ஆண்டுகளின் சிலம்பின் கதைத்திருவிழாவில் முகிழ்த்த கற்பனைகள் அற்புதமான சித்திரக் கதைகளாய் உருவாகியுள்ளன.
What's Happening in our Community
- இளம் தமிழ் பேச்சாளர்கள் - தமிழகத்தின் கலைகளும் இலக்கியங்களும் பற்றி தெரிந்து கொள்ள பேச விருப்பமா? நமது ஆசிரியை திருமதி.லதா குமார் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
சிலம்பின் சிறப்புச் செயல்பாடுகள்:
- சிலம்பு இளையோர் கால்பந்தாட்டம் - பிப்ரவரி 07, வகுப்பு கிடையாது.
- சிலம்பு கூடைப்பந்து - வகுப்பு உண்டு.
வாருங்கள் வாழ்த்துவோம் !!
சிலம்பு புத்தகப்போர் 2026 -நம் நினைவில் என்றும் நிற்கும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் கதைகள் மாணவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தையும் சிந்தனைத் திறனையும் வளர்த்த ஒரு கல்வித் திருவிழாவாக இது திகழ்ந்தது.
இதில் பங்கேற்ற மாணவர்கள், அமைதியாக பார்த்த மற்ற மாணாக்கர்கள், ஊக்கமளித்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், நூலகக் குழு மற்றும் நடுவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
✨✨ இந்த நிகழ்ச்சியைக் குறித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ள எழுத்தாளர் எஸ்.ரா.க்கும் நமது நன்றி. ✨✨
Winners & Runners
🏆 Winners:
Teams - புத்தக கண்மணிகள்,அறிவு நட்சத்திரங்கள்,நூல் நண்பர்கள், வாசிப்போம் வா
🏆 Runners:
Teams - சொல்வீரர்கள்,வாசகர் கூட்டம்,புத்தக மேதைகள்,சாரல்,சிலம்பின் சிறகுகள்
🧩 கணக்கில் புலியா! - உங்களுக்காக Puzzle 4



பொதுவெளி செய்தி:
விமான பயணிகளின் கவனத்திற்கு, பிப்ரவரி 1, 2026 முதல் கீழ்க் கண்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது
விதிமுறைகள்!
REAL ID அவசியம்: அமெரிக்காவிற்குள் விமானத்தில் பயணம் செய்ய 'REAL ID' (நட்சத்திரக் குறியீடு உள்ள உரிமம்) அல்லது கடவுசீட்டு (பாஸ்போர்ட்) கட்டாயம்.
உங்களிடம் REAL ID இல்லையென்றால், விமான நிலையத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, ஆன்லைனில் $45 செலுத்தி TSA மூலம் சரிபார்ப்பு செய்ய வேண்டும்.
கவனம்:
இதற்கு கூடுதல் நேரம் எடுக்கும். இந்த $45 அனுமதி 10 நாட்களுக்கு மட்டுமே செல்லும்.
பரிந்துரை:
பண விரயம் மற்றும் அலைச்சலைத் தவிர்க்க, உடனடியாக உங்கள் ஓட்டுநர் உரிமத்தை (Driver's License) REAL ID-க்கு மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது பயணத்தின் போது கடவுசீட்டைக் (Passport) கையில் வைத்திருங்கள்.


சுலபமாக தமிழ் எழுத்துகளைக் கற்போம்!
கீழேயுள்ள மஞ்சள் கட்டங்களை சொடுக்குங்கள் - தமிழை எளிமையாய், விளையாட்டாய் நம் குழந்தைகள் கற்க சிலம்பின் புதிய முயற்சி.
(Tamil letters practicing App for SILAMBU Students and Student volunteers)
சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி விளையாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும்
முக்கிய இணைப்புகள்:
Website: https://silambu.us/
School LMS : https://openlms.mntamilschool.org/login/index.php
Library LMS : :https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1
Location: Hillside Elementary School, 36801 11 Mile Rd, Farmington Hills, MI 48335
Thank you for taking the time to read through our newsletter. If you have any questions or need further information, please don't hesitate to reach out to us.
With gratitude - see you in the next edition,
Hemalatha. K
தூரிகை தொகுப்பாளர்
On behalf of the Newsletter Team.
