Silambu_Logo_Final
தூரிகை பரல் – 4 Jan 30

குழந்தைகளின் கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும் சிறகுகள் முளைக்கும் ஒரு அழகான மேடை சிலம்பின் கதைத் திருவிழா. குழந்தைகளே உங்கள் கதை தயாரா? 

முந்தைய ஆண்டுகளின் சிலம்பின் கதைத்திருவிழாவில் முகிழ்த்த கற்பனைகள் அற்புதமான சித்திரக் கதைகளாய் உருவாகியுள்ளன.


விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி -13

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்-35

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்-64


  • 01/31/2026 : கதைத் திருவிழா & புத்தகப் போர் (Battle of Books)
  • 02/07/2026 :  சிலம்பின் சிலம்பு செஸ், ரோபாட்டிக்ஸ்,  & ஹார்வர்டு பல்கலைக்கழக வணிக திறன் ஊக்க வகுப்பு  விருப்ப விண்ணப்ப படிவத்தை விருப்பமுள்ளோர் பதிவு செய்யவும்.
  • நமது சிலம்பு தமிழ்ப்பள்ளி நூலகர்கள் நடத்தும் தமிழ் புத்தகப் போர் வரும் ஜனவரி 31 அன்று நடக்க இருக்கிறது.
  • எழுத்தாளர் எஸ்.ரா (எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்) வின் கீழ்க்காணும் புத்தகங்கள் தான் இந்த வருட புத்தகப் போருக்கானவை.


  • இளம் தமிழ் பேச்சாளர்கள் - தமிழகத்தின் கலைகளும் இலக்கியங்களும் பற்றி தெரிந்து கொள்ள பேச விருப்பமா? நமது ஆசிரியை திருமதி.லதா குமார் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

  • சிலம்பு சதுரங்க அணி (Chess Club)-  மேலதிக தகவலுக்கு swami@silambu.us மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.
  • சிலம்பு  ரோபாட்டிக்ஸ் -  மேலதிக தகவலுக்கு swami@silambu.us மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.
  • ஹார்வர்டு வணிகத் திறன் ஊக்க வகுப்பு  - பதிவு செய்ய https://enroll.silambu.us/product/harvard-lead-program-extended/ 
  • சிலம்பு கூடைப்பந்து - ஜனவரி 31, வகுப்பு கிடையாது.

  1. அறிவு நட்சத்திரங்கள் - ஆசிரியை சுபா & தன்னார்வலர் சாந்தி
  2. வாசகர் கூட்டம் - ஆசிரியர் பிரசாத் & அவரது துணைவியார் லோகாம்பிகா
  3. புத்தகக் கண்மணிகள் - ஆசிரியை பிரியா
  4. சொல்வீரர்கள் (மெய்நிகர் குழு)- ஆசிரியை செல்வி
  5. புத்தக மேதைகள் - தன்னார்வலர் சௌத் லயான் சுதாகர்
  6. நூல் நண்பர்கள் - ஆசிரியை ஹேமா
  7. வாசிப்போம் வா - தன்னார்வலர் வனிதா
  8. சிலம்பின் சிறகுகள் - ஆசிரியை மகாலட்சுமி
  9. சாரல் - ஆசிரியை மதுனிகா

இந்த நிகழ்ச்சிக்காக உழைத்துக்கொண்டு இருக்கும் நூலகர் சாரதப்பிரியா, தன்னார்வலர் ராஜி, தன்னார்வலர் அபிநயா,  ஆசிரியை அர்ச்சனா , ஆசிரியர் தமிழ்வாணன் மற்றும் பங்கேற்க ஊக்கம்ளித்த அனைத்து பெற்றோர்களுக்கும் பாராட்டுகள்.



கீழேயுள்ள மஞ்சள் கட்டங்களை சொடுக்குங்கள் - தமிழை எளிமையாய், விளையாட்டாய் நம் குழந்தைகள் கற்க சிலம்பின் புதிய முயற்சி.

(Tamil letters practicing App for SILAMBU Students and Student volunteers)

சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி விளையாட்டை கண்டிப்பாக செய்ய வேண்டும்



Website: https://silambu.us/

School LMS https://openlms.mntamilschool.org/login/index.php

Library LMS : :https://lms.silambutamilschool.com/login/index.php?loginredirect=1

Location: Hillside Elementary School, 36801 11 Mile Rd, Farmington Hills, MI 48335

Thank you for taking the time to read through our newsletter. If you have any questions or need further information, please don't hesitate to reach out to us.

With gratitude - see you in the next edition,
Hemalatha. K

தூரிகை தொகுப்பாளர்
On behalf of the Newsletter Team.